திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு சென்னையில் இருந்து 11 வெண்பட்டுக் குடைகள் புறப்பட்டன
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2022 03:09
சென்னை : திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் சமர்ப்பிக்கப்பட உள்ள 11 வெண்பட்டுக் குடைகள் சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டன. ஊர்வலத்தை விசாகா ஸ்ரீ சாரதா பீடம் உத்தர பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஸ்வாத்மானந்தேந்த்ர சரஸ்வதி சுவாமிகள் கொடியசைத்து தொடக்கி வைத்தார். அருகில் ஹிந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் வேதாந்தம், இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி, விசுவ ஹிந்து வித்யா கேந்திரா பொதுச் செயலாளர் கிரிஜா சேஷாத்திரி, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் சிறப்பு அழைப்பாளர் சேகர்ரெட்டி ஆகியோர் உள்ளனர் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.