உடுப்பி : கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் நவராத்திரி திருவிழா நாளை 26ம் தேதி முதல் 5.10.22 வரை சிறப்பாக நடைபெறுகிறது. விழாவில் 4.10.22 அன்று காலை 11.30 மணிக்கு சண்டியாகம் நடைபெறுகிறது. மதியம் 1.05 மணிக்கு தனுர் லக்னத்தில் ரதோத்ஸவம் நடைபெறுகிறது. 5.10.22 விஜயதசமியன்று வித்யாரம்பம் சிறப்பாக நடைபெற உள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.