பள்ளிகொண்ட பெருமாள் கோவிலில் புரட்டாசி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2022 04:09
மயிலம்: புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி ரங்கநாயகி சமேத பள்ளிகொண்ட பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் மயிலம் கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பு அருகில் உள்ள ரங்கநாயகி சமேத பள்ளிகொண்ட பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று காலை மூலவர் பள்ளிக்கொண்ட பெருமாள் மற்றும் உற்சமுர்த்திகளுக்கு பால் மற்றும் பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பெருமாளுக்கு வெண் பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.அதைதொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.