Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறையில் மஹாளயபட்ச ... நவராத்திரி முதல் நாள் : மனோன்மணி அலங்காரத்தில் தஞ்சை பெரியநாயகி நவராத்திரி முதல் நாள் : மனோன்மணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தீர்த்தத்தை தூய்மைப்படுத்த பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தீர்த்தத்தை தூய்மைப்படுத்த பக்தர்கள் கோரிக்கை

பதிவு செய்த நாள்

26 செப்
2022
11:09

மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சந்திரதீர்த்த குளத்தை தூய்மைபடுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் தேவார பாடல் பெற்ற  வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சிவனின் முன்கண்ணிலிருந்து தோன்றிய முன்று பொறிகள் விழந்த இடத்தில் சூரியன், சந்திரன், அக்னி என்கிற முன்று குளங்கள் தோன்றியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இந்த குளங்களில் புனித நீராடி இறைவனை வழிபட்டால் குழந்தைபேறு நிச்சயம் என சுவேத புராணம் தெரிவிக்கிறது. இத்தகைய புனித குளங்களில் நீராட தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற முக்குளங்களில் சந்திர தீர்த்த குளத்தில் தேங்கியுள் நீர் மிகவும் மாசடைந்தும், நிறம் மாறியும் காணப்படுகிறது. அதோடு மட்டும் அல்லாமல் நீரில் ஒருவிதமான துர்நாற்ற வாடை வீசுகிறது. இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில் கோயிலுக்கு முன்று குளங்களிலும் நீராடி சுவாமியை தரிசனம் செய்யவேண்டும் என விதி உள்ளது. ஆனால் சந்திர தீர்த்த குளத்தில் நீராட அச்சமாக உள்ளது. எனவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மாசடைந்த நீரை வெளியேற்றிவிட்டு புதிய நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறினர். குளத்திற்கு  நீர் வரும் பாதையை  சீரமைக்கவும், குளத்தில் நீரை ஆண்டி வாய்க்காலிருந்து நிரப்பிட பணியாளர்களை நியமனம் செய்திடவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பக்தர்கள் அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar