மலுமிச்சம்பட்டி நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் நவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2022 02:09
கோவை : கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் மத நல்லிணக்கத்தை வேண்டி நவராத்திரி விழா இன்று தொடங்கியது நிலவேம்பு சித்தர்ஸ்ரீ பாபுஜி சாமிகள் தலைமையில் நவராத்திரி விழாவில் பெண்கள் மாலை அணிவித்துஒன்பது நாட்கள் விரதம் எடுத்து உலக நலன் வேண்டி கோவையில் அமைதி திரும்ப வேண்டும் மத நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை அம்மன் பாதத்தில் வைத்து 1008 மலர் அர்ச்சனை பம்பை ஓசை முழங்க இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.....விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து பெண்களுக்கும் மஞ்சள் குங்குமம் நெய்வேத்திய பிரசாதம் அளிக்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை குரு மாதாஜி சரஸ்வதி அம்மாள் பாக்கியலட்சுமி இளைய பட்டம் பாலரிஷிஸ்ரீ நாக விக்னேஷ் தங்கதுரை போன்றவை ஏற்பாடு செய்தனர்.