பதிவு செய்த நாள்
27
செப்
2022
05:09
அன்னூர்: சொக்கம்பாளையம் செல்வ விநாயகர் கோவில் நவராத்திரி அன்னதான விழா நேற்று துவங்கியது.
பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோவிலில் 55வது ஆண்டு நவராத்திரி அன்னதான விழா, கணபதி பூஜை உடன் நேற்று துவங்கியது. தேவகி திருவேங்கடம் துவக்கி வைத்தார். கொலு பூஜை நடந்தது. விழா செயலாளர் கங்காதரன் உட்பட பலர் பங்கேற்றனர். இன்றும், நாளையும், இரவு வழிபாட்டு குழுவின் பஜனை நடக்கிறது, வரும் 29ம் தேதி இரவு தேசிய வித்யாசாலை பள்ளியின் நடனம், பாடல், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு, பரிசு வழங்கப்படுகிறது. வரும் 30ம் தேதி மாலை, திருவிளக்கு வழிபாடும், இரவு தாசபளஞ்சிக மாதர் சங்கம் சார்பில் சிறுவர், சிறுமியரின், கலை நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் அக். 1ம் தேதி இரவு பேச்சாளர் மகேஸ்வரி சத்குரு தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது. அக். 2ம் தேதி இரவு பஜனையும், வரும் 3 ம் தேதி இரவு பட்டிமன்றமும் நடக்கிறது. வரும் 4ம் தேதி இரவு அம்மன் அழைப்பும், வள்ளி கும்மியாட்டமும் நடக்கிறது. வரும் 5ம் தேதி காலையில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தல், சிறப்பு பஜனை, மதியம் அலங்கார பூஜையுடன் அன்னதானம் நடக்கிறது. மாலையில் கல்வி அறக்கட்டளை சார்பில், சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இரவு சுவாமி திருவிதியுலா, பிருந்தாவன பஜனையுடன் நடக்கிறது.