அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2022 01:09
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்கான ராஜகோபுரம் முன் நடப்பட்ட பந்தக்கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் டிசம்பர் மாதம் 6ம் தேதி மாலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் ஏற்றப்பட உள்ளது. தீபத்திருவிழாவினை முன்னிட்டு பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் நடும் முகூர்த்த விழா இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.