பதிவு செய்த நாள்
30
செப்
2022
02:09
பொன்னேரி: பொன்னேரி அடுத்த, தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள லட்சுமியம்மன் கோவிலில், கடந்த 26ம் தேதி, நவராத்திரி விழா துவங்கியது. முதல் நாள் விழாவில், மகேஸ்வரி
அலங்காரத்திலும், 2ம் நாளில், கவுரிமாரி அலங்காரத்திலும் அம்மன் உள்பிரகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூன்றாம் நாள் விழாவான நேற்று முன்தினம் மாலை , அன்னபூரணி அலங்காரத்தில் அம்மன் வீற்றிருந்தார். சிறப்பு தீபாராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், பல்லக்கு சேவை ஆகியவை சிறப்பாக நடைபெற்றன. அக்டோபர் , 5ம் தேதி வரை மகாலட்சுமி, வராகி அம்மன், வை ஷ்ணவி அம்மன், துர்கையம்மன், சரஸ்வதி அம்மன் அலங்காரங்கள் உற்சவங்கள் நடைபெற உள்ளன.