உலகளந்த பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2022 06:09
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி வெள்ளிக் கிழமையும் முன்னிட்டு சுவாமி திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத வெள்ளிக் கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை 5:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:30 மணிக்கு நித்திய பூஜைகள், 7:00 மணிக்கு திருப்பாவை சாற்றுமரை, 7:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி கண்ணாடி அறையில் எழுந்தருளினார். 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. மாலை 5:30 மணிக்கு நவராத்திரியை முன்னிட்டு புஷ்பவல்லி தாயார் கொலுமண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.