பதிவு செய்த நாள்
01
அக்
2022
02:10
மயிலாடுதுறை: சீர்காழி அருகே உள்ள ஸ்ரீ சத்குரு ஒளிலாய ம் பீடத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு பஞ்சபூத மகா யாகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள காரைமேடு கிராமத்தில் 18 சித்தர் கள் தனித்தனி சன்னதியில் எழுந்தருளி யுள்ள ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் பீடம் அமை ந்துள்ளது. இந்த பீடத்தில் ஸ்தாபகரான ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் குருபூஜை விழா இன்று நடைபெற்றது. குருபூஜை விழாவை முன்னிட்டு ஒளிலாயம் பீடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பீடத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட பந்தலில் உலக நன்மை வேண்டி நிலத்திற்கு அதிபதியான தியாகேசர், நீருக்கு அதிபதியான ஜம்பு நாகேஸ்வரர், அக்னிக்கு அதிபதியான அருணாச்சலேஸ்வரர், வாய்வுக்கு அதிபதியான காளகஸ்தீஸ்வரர், ஆகாயத்திற்கு அதிபதியான சிதம்பரேஸ்வரர் சுவாமிகள் அம்பாளுடன் எழுந்தருள செய்து, அவர்களுக்கு முன்பாக 5 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு பஞ்சபூத மகா யாகம் நடத்தப்பட்டது. மதியம் 2 மணிக்கு மங்கள வாத்தியம் முழங்க, வேத மந்திரங்கள் ஓத பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. யாகம் மற்றும் சிறப்பு பூஜைகளை அருள் சிவம் தலைமையிலான 14 சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். முன்னதாக யாகத்திற்கான பொருட்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஒலிலாயம் பீடத்தில் நடைபெற்ற குருபூஜை விழா மற்றும் பஞ்சபூத மகா யாகத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், தற்போதைய வேதாரணியம் தொகுதி எம்எல்ஏவுமான ஓஎஸ்.மணியன், மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் பவுன்ராஜ், மாவட்ட அவைத் தலைவர் பாரதி உள்ளிட்ட ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். யாகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மங்களப் பொருட்களுடன், நெய்வேத்திய பிரசாதம் வழங்கப்பட்டது. குருபூஜை விழாவிற்கான ஏற்பாடுகளை ஒளிலாயம் பீடத்தின் நிர்வாகிகள் செந்தமிழ் செல்வன், மாமல்லன், செல்வமுத்துக்குமரன், பரதன் ஆகியோர் செய்திருந்தனர்.