மதுரை: மதுரை, பைபாஸ் ரோடு கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 5ம் தேதி வரை நடைபெறும் விழாவில் தினமும் அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். விழாவில் இன்று கஜலட்சுமி அலங்காரம் சாரதாம்பாள் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 3ம் தேதி ஸதசண்டி மகா யாகம், 5ம்தேதி நவராத்திரியை முன்னிட்டு, லலிதா ஹோமம் நடைபெறுகிறது.