தஞ்சாவூர் : தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் ஒரு கலாச்சார மற்றும் பாரம்பரிய மையம். நவராத்திரி ஆறாம் நாளில் இரண்டு புகழ்பெற்ற நடனக் குழுக்கள், ஸ்ரீ சக்தி நாட்டிய கலாலயம் மற்றும் ஸ்ரீ நிருத்யாஞ்சலி நாட்டிய கலாலயம் மாணவிகள் நமது இரு மையங்களிலும் தங்களது சிறப்பான நிகழ்ச்சிகளை வழங்கின.