பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நவராத்திரி விழா: மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2022 06:10
புதுச்சேரி: இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் ஒன்பதாம் ஆண்டு நவராத்திரி விழாவில், மாணவ மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி- திண்டிவனம் பைபாஸ் சாலை, இரும்பையில் உள்ள பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் 12 ஆம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த செப்.25 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. அதையொட்டி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள கொலுவை சிறப்பிக்கும் விதமாக ஒன்பது நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. எட்டாம் நாளான நேற்று மூலவர் பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு காலையில் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைதொடர்ந்து மாலையில், புதுச்சேரி பரதாலயா நாட்டிய பள்ளி மாணவிகள் அபயகரம் குரு கிருஷ்ண ரத்தினசபா தலைமையிலும், இசை நாட்டிய பள்ளி மாணவிகள் குரு ஸ்ரீமதி சித்ரா ரினேஷ் தலைமையில் நாட்டியம் ஆடினர். நாட்டியமாடிய, மாணவிகளுக்கு கணேஷ் குருக்கள் பரிசு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.