பதிவு செய்த நாள்
05
அக்
2022
07:10
சூலூர்: வீடுகள் மற்றும் கோவில்களில் நவராத்திரி பூஜை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடந்த எட்டு நாட்களாக வீடுகள் மற்றும் கோவில்களில் நவராத்திரி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரை, சொக்கலிங்கநகர் சிவன் கோயிலில் சிவ பூஜை அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
ஒன்பது, ஏழு படிகள், ஐந்து படிகள் வைத்து கண்ணை கவரும் வித, விதமான பொம்மைகள் வைத்து தினமும் பூஜைகள் நடந்தன. கோவில்களில் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. வீடுகளில் தினமும் கொலு பூஜை செய்து, பெண் குழந்தைகளுக்கு, புத்தாடை வழங்கி, கன்யா பூஜை செய்யப்பட்டது. நேற்று பாட புத்தகங்கள் அடுக்கப்பட்டு, சரஸ்வதி பூஜை செய்யப்பட்டது. துர்கா, லட்சுமி, சரஸ்வதி பாடல்கள் பாடப்பட்டன. பெண்களுக்கு தாம்பூலங்கள் வழங்கப்பட்டன.