பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் ரதோற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2022 07:10
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் ரதோற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனர்.
உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. கடந்த 25ம் தேதி பிரம்மோற்சவ விழா துவங்கியது. அன்று முதல் தினசரி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. கடந்த 29ம் தேதி திருப்பல்லக்கு விசேஷமும், திருமஞ்சனம், ததியாராதனமும் நடந்தது. இரவு சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. 30ம் தேதி காலை 11 மணியளவில் திருபல்லக்கில் பெருமாள் நாச்சியார் திருக்கோல சேவை, விசேஷ திருமஞ்சனமும், ததியாராதனமும் நடந்தது. இரவு தங்கக் கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 2ம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 7.30 மணியளவில் தேரில் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தோரோட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க., மாநில நிர்வாகிகள் அருள், குருமூர்த்தி, கூட்டுறவு சங்க தலைவர் சம்பத்ஐயர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா விஜயராகவ அய்யங்கார் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர். 7ம் தேதி வரை சுவாமி வீதியுலா நடக்கிறது.