கூடலூர் கோவில்களில் வித்யாரம்பம்: குழந்தைகள் எழுத்து துவங்கினர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2022 01:10
கூடலூர்: கூடலூரில் உள்ள கோவில்களில் குழந்தைகள் எழுத்து துவங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. ஆண்டுதோறும், விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கான எழுத்து பயிற்சி துவங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சிகள் அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகிறது. கூடலூரில் வித்யாரம்பம் நிகழ்ச்சி கூடலூர் விநாயகர் கோவில், முன்ஸ்வரன் கோவில், கோழிப்பாலம் ஐயப்பன் கோயில், ஸ்ரீமதுரை மாஹாவிஷ்ணு கோவில், மண்வயல் மாதேஸ்வரன், கல்லிங்கரை சிவன் கோவில், கூ மற்றும் கிராம கோவில்களில் நேற்று, நடந்தது. இதில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சியை துவங்கினார்கள்.