வித்யாரம்பம் நிகழ்ச்சியில் அ கரம் எழுதிய குட்டீஸ்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2022 11:10
பந்தலூர்: பந்தலூர் அருகே பொன்னானி மகா விஷ்ணு கோவிலில், விஜயதசமி சிறப்பு பூஜைகள் நடந்தது.
விஜயதசமியை முன்னிட்டு, பொன்னானி மகா விஷ்ணு கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக தொடர் பூஜைகள் செய்யப்பட்டது. கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து குழந்தைகளுக்கு, எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் சதீசன்நம்பூதிரி குழந்தைகளின் நாவில் தங்கமோதிரத்தில், தேன் தடவி அ எழுதினார். தொடர்ந்து பச்சரிசியில், குழந்தைகளின் விரலை கொண்டு எழுதப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் வழங்கியதுடன், கோவில் நிர்வாகி சந்தியா குழந்தைகளுக்கு நோட்டுபுத்தகம்,பேனா, பென்சில் வழங்கினார்.இதில் பந்தலூர் தாலுக்கா வை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.