வள்ளலாரின் 200 வது அவதார தின விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2022 01:10
புவனகிரி: கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த மருதூரில் அவதரித்து வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய அருட்பிரகாச வள்ளலாரின் 200 வது அவதார தின விழா நேற்று சன்மார்க்கக் கொடியேற்றத்துடன் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்ற முழக்கத்துடன் துவங்கியது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காலையிலிருந்து வள்ளலார் அவதார் இல்லத்திற்கு வருகை தந்தனர். அங்கு அகவற்ப பாடி வள்ளலாரின் அருளை பெற தியானத்தில் ஈடுபட்டனர். காலையிலிருந்து தொடர்ந்து சுடுதண்ணீர் மற்றும் அன்னதானம் தொய்வின்றி வழங்கினர்.