தஞ்சாவூர்: பெண்களுக்கு உரிய மரியாதையும் கல்வியும் கொடுக்காத காரணத்தால்தான் நம் நாடு முன்னேறாமல் போய்விட்டது என்று சுவாமி விவேகானந்தர் உரைத்தார்.
இந்த நவராத்திரியில் ஒன்பது தினங்கள் பண்பாட்டு- கல்வி -ஆன்மீகம்- பாரம்பரியம் சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்குப் பிறகு முத்தாய்ப்பாகப் பெண்களை மரியாதை செய்யும் விழா சிறப்பாக நடைபெற்றது. சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட, அங்கீகாரமற்ற, மாற்றுத்திறனாளி பெண்கள், திருநங்கைகள், துப்புரவு பணிப்பெண்கள் ஆகியோரை மடத்திற்கு அழைத்து அவர்களையே தேவிகளாக பாவித்து நேற்று பூஜை நடைபெற்றது. வஸ்திர தானத்தோடு திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்காக கறவைப் பசுக்களை வழங்கினோம். அதன் மூலம் 27 திருநங்கைகள் தாங்கள் உழைத்துச் சம்பாதிப்பதற்கான தொடக்கம் அன்னை ஸ்ரீசாரதையின் அருளால் விஜயதசமியன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.