திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பச்சையம்மன் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. நவராத்திரி நிறைவு விழாவையொட்டி, பச்சையம்மன் சிறப்பு அலங்காரத்தில், வேங்கிக்கால் ஓம் சக்தி கோவில் அருகே அம்பு விடும் நிகழ்ச்சி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.