காரமடை அரங்கநாதர் கோவிலில் ராமபானத்துக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2022 11:10
மேட்டுப்பாளையம்: நவராத்திரியை முன்னிட்டு, அரங்கநாத பெருமாளின் ராமபானத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
காரமடை அரங்கநாதர் கோவிலில், நவராத்திரி உற்சவம் நடைபெற்று வருகிறது. தினமும் ரங்கநாயகி தாயார் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் வலம் வந்து, மந்திர புஷ்பம், லட்சுமி அஷ்டோத்திரம் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்றன. ஒன்பதாம் நாளில் சரஸ்வதி பூஜை வைபவம் நடந்தது. இதில் வைணவ திருத்தலங்களில், வேறு எங்கும் இல்லாத சிறப்பு, காரமடை அரங்கநாத பெருமாள் சுவாமி கோவிலில், அரங்கநாத சுவாமி ராம பானத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு கோவில் வளாகத்தில் ஊர்வலமாக எடுத்துவந்து, மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகள், யாகசாலை மண்டபம், மடப்பள்ளி, வாகன மண்டபம், தாயார் சன்னதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டன.