திருப்புல்லாணி: சின்னாண்டி வலசை ஊராட்சியில் உள்ள சங்கன்வலசையில் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோயில் உள்ளது. 4ம் ஆண்டு தசரா விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு மஞ்சள் நீராடுதல், கரகம் முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்டவைகள் நடந்தது. இரவு 10:00 முதல் 11.30 மணி வரை காளிக்கு சிறப்பு பூஜை, அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. அதிகாலை 1:00 மணி அளவில் கோயில் முன்பு வளர்க்கப்பட்ட அக்னியில் நேர்த்திக்கடன் பக்தர்களால் பூ இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 7:00 மணியளவில் அக்னி சட்டி எடுத்து கிராம வீதிகளில் உலா வந்தனர். காலை 10 மணியளவில் தசரா விழாவை முன்னிட்டு பத்திரகாளி அம்மன் வேடமணிந்து பூசாரி பாலா வலம் வந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.