மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தற்காலிக மேற்கூரை அகற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2022 02:10
மணவாளக்குறிச்சி: மண்டைக்காடு ப கவதி அம்மன் கோவில் மேற்கூரை திருப்பணிக்கு உத்தரம் மற்றும் கழுக்கோல் அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்காலிகமாக அமைக்கப்பட்ட மேற்கூரை அகற்றும் பணி நேற்று துவங்கியது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மேற்கூரை கடந்த வருடம் ஜூ ன் 2ம் தேதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை அடுத்து கோவிலில் தற்காலிகமாக மே ற்கூரை அமைக்கப்பட்டது. பின்னர் கடந்த நவம்பர் 24ம் தேதி ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் துவங்கப்பட்டது. அன்று முதல் மே ற்கூரை அமைப்பதற்கு தேவையான உத்தரம், கழுக்கோல், பட்டியல் ஆகியவற்றிற்கான மர வேலைகள் அருகில் உள்ள தேவசம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் துவங்கியது. தற்போது பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று கோவில் மேற்கூரையில் அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டகை அகற்றும் பணி துவங்கியது. இந்த பணி நிறைவு பெற்றதும் ஆகம விதிகளுக்கு உட்பட்டு தயார் செய்து வைக்கப்பட்டு உள்ள உத்தரம், பட்டியல், கழுக்கோல் வைத்து மேற்கூரை அமைக்கும்பணி துவங்கும்.