ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது : பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2022 01:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரகாரத்தில் மழை நீர் தேங்கி கிடந்ததால், பக்தர்கள் அவதிப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட தீவு பகுதியில் கனமழை பெய்தது. இதில் ராமேஸ்வரம் 7.5 செ.மீ., பாம்பன், தங்கச்சிமடம் தலா 4 செ.மீ., மழை பதிவானது. இதனால் ராமேஸ்வரம், தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன்பு 2 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி கிடந்தது. மேலும் திருக்கோயில் முதல் பிரகாரத்தில் சுவாமி, அம்மன் சன்னதி சுற்றி மழைநீர் அரை அடி உயரத்திற்கு தேங்கியது. இதனால் சுவாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் மழை நீரில் சிரமத்துடன் நடந்து சென்றனர். பின் நேற்று காலை 7 மணிக்குள் கோயில் ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றினர்.