காஞ்சிபுரம் சந்தவெளியம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2022 08:10
காஞ்சிபுரம், : பெரிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில், தான்தோன்றீஸ்வரர் கோவில் அருகில், சந்தவெளியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா 14 நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான நவராத்திரி விழா கடந்த மாதம் 26ல் துவங்கியது. தினமும் மாலையில், சந்தவெளியம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவராத்திரி நிறைவு நாளும், பவுர்ணமியான நேற்று ஊஞ்சல் சேவை உற்வசம் விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி கோவில் முழுதும் வண்ண விளக்குகளால் ஜொலித்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் சந்தவெளி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மலர் அலங்காரம் மஹாதீப ஆராதனை நடந்தது. உற்சவர் அம்மன் ஊஞ்சல் சேவை உற்சவத்தில் அருள்பாலித்தார்.