கன்னியாகுமரி காளிகேசம் காளி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2022 08:10
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் சக்திவாய்ந்த புனித தலமான காளிகேசம் காளி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது. பக்தி இசை , சிறப்பு அபிஷேகம், லலிதா சகஸ்ரநாம பூஜை , பரசேரி சியாமளா விஸ்வேஸ்ரன் தலைமையில் நடைபெற்றது. அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, அன்னதானம், அதனை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பவுர்ணமி பூஜையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து காளிகேசத்திற்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை காளிகேசம் ஸ்ரீகாளிஅம்மன் கோவில் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பவுர்ணமி பூஜை வழிபாட்டுகுழு நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.