திருப்போரூர் ; கேளம்பாக்கம் அடுத்த, புதுப்பாக்கத்தில், வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும். நேற்று புரட்டாசி நவராத்திரியை தொடர்ந்து வந்த பவுர்ணமி என்பதால், சிறப்பு மலர் அர்ச்சனை, தீபதுாப ஆராதனை நடந்தது. விடுமுறை நாட்கள் என்பதால், அதிக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.