சோழவந்தான்: நாகமலைபுதுக்கோட்டை நாகமலை அடிவாரத்தில் தடாதகை நாச்சியார், முத்தையா சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் புரட்டாசி பொங்கல் விழா அக்,4ல் செவ்வாய் சாட்டுதலுடன் துவங்கியது. அம்மன், சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று இரவு கிராம கோவில் வீட்டில் இருந்து அம்மனுக்கு பொங்கல் வைக்க பெண்கள் பொங்கல் பானையுடன் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து, கிடா வெட்டி பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அக்.,14ல் முத்தையா சுவாமிக்கு பொங்கல் வழிபாடு நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராமத்தார்கள் செய்திருந்தனர்.