திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே சுப்புத்தேவன் வலசையில் உள்ள சக்தி முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. அக்., 2 அன்று காப்புக் கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் இரவில் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று மூலவர் சக்தி முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. இன்று காலையில் மலர் அலங்காரம் செய்யப்பட்டு கோயில் முன்பு ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தனர். மாலை 4:00 மணி அளவில் முளைப்பாரி ஊர்வலம் சென்றது. ஊரணியில் முளைப்பாரி கங்கை சேர்க்கும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.