ஏழுமலையான் நேத்ர தரிசனம் (கண்கள் திறந்தபடி இருப்பது) பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2022 12:10
திருப்பதி: ஐதராபாத்தில் நடந்து வரும் வைபவோற்சவத்தின், 3ம் நாள் ஏழுமலையானை நேத்ர தரிசனத்தில் கண்டு பக்தர்கள் வணங்கினர். திருமலையில் தினசரி ஏழுமலையானுக்கு நடக்கும் அனைத்து வகையான சேவைகளையும் பக்தர்கள் அனைவரும் கண்டுகளிக்க ஐதராபாத்தில், 5 நாட்கள் ஸ்ரீ வெங்கடேஸ்வர வைபவோற்சவத்தை தேவஸ்தானம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அங்குள்ள என்டிஆர் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏழுமலையான் பராஷ்டிரா கோவிலில் தினசரி கைங்கரியங்கள் சரியாக நடத் தப்பட்டு வருகிறது. அதன் 3ம் நாளான நேற்று காலை நேத்ர தரிசனத்தை (கண்கள் திறந்தபடி சிறிய நாமத்துடன் இருப்பது) கண்டு பக்தர்கள் வணங்கினர். பின்னர் ஏழுமலையான் முன்னிலையில் பெரிய அளவில் புளியோதரை அன்னத்தை அலங்கரித்து அதன் மேல் நாமம், சங்கு, சக்கரம் உள்ளிட்டவற்றை பழங்கள் , துளசி தளங்களால் அலங்கரிக்கும் திருப்பாவடை சேவையும் நடை பெற்றது. திருப்பாவாடை சேவையை அன்னகூட்டோற்சவம் என்ற பெயரில் வைணவத்தில் அழைப்பதுண்டு. இதிலும் பக்தர்கள் கலந்து கொண்டு ஏழுமலையானை வணங்கினர். இதில் கோவில் அதிகாரிகள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.