வல்லக்கோட்டை முருகன் கோவிலில் புரட்டாசி கிருத்திகை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2022 12:10
ஸ்ரீபெரும்புதுார்:வல்லக்கோட்டை முருகன் கோவிலில் புரட்டாசி மாத கிருத்திகை வழிபாடு நடந்தது.
ஸ்ரீபெரும்புதுார் அருகே வல்லக்கோட்டை கிராமத்தில் 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. அருணகிரி நாதரால் பாடல் பெற்ற இத்தலத்தில் முருகப்பெருமான் நின்ற நிலையில் திருமண கோலத்தில் 7 அடி உயரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு மாதந்தோறும் கிருத்திகை வழிபாடு விமரிசையாக நடக்கும். நேற்று புரட்டாசி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு, மூலவர் சந்தன காப்பு அலங்காரத்திலும், உற்சவர் மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனை வழி பட்டு சென்றனர்.