Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்ரிநாத் கோயிலில் முகேஷ் அம்பானி ... ராமநாதபுரம் முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு ராமநாதபுரம் முருகன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவபெருமான் சிலை வடிக்க மாமல்லபுரம் வந்தது பிரமாண்ட பாறை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிவபெருமான் சிலை வடிக்க மாமல்லபுரம் வந்தது பிரமாண்ட பாறை

பதிவு செய்த நாள்

14 அக்
2022
12:10

மாமல்லபுரம்:பீஹார் மாநிலத்தில், 33 அடி உயரத்தில் பிரமாண்டமான சிவபெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இந்த சிலையை, மாமல்லபுரம் சிற்பக் கலைஞர் லோகநாதன் மற்றும் அவரது குழுவினர், மாமல்லபுரம் அடுத்த பட்டிக்காடு பகுதியில் வடிக்க உள்ளனர். சிலை வடிக்க தேவைப்படும் பிரமாண்ட பாறை, திருநெல்வேலி மாவட்டம், சீலாத்திகுளம் பகுதியிலிருந்து நேற்று எடுத்து வரப்பட்டது. இதன் எடை, 270 டன்.  என்.டி.சி., தனியார் நிறுவனத்தின், 154 டயர்கள் உடைய நீளமான டிரெய்லர் லாரி மூலம், இப்பாறை மாமல்லபுரத்திற்கு எடுத்து வரப்பட்டது. கடந்த 6ம் தேதி புறப்பட்ட லாரி, நேற்று மாலை, திருக்கழுக்குன்றம், கொத்திமங்கலம் பகுதியை கடந்தது. இதுகுறித்து, சிற்பி லோகநாதன் கூறியதாவது: பீஹாரில் அமைக்கப்படும் கோவிலுக்காக, பிரமாண்ட பாறையில் சிலை செய்கிறோம். இதற்காக வாங்கப்பட்ட பாறையின் மதிப்பு, 40 லட்சம் ரூபாய். அதை கொண்டு வரும் போக்குவரத்து செலவு, 45 லட்சம் ரூபாய். இச்சிலையை, 1,008 லிங்கங்கள், ஐந்து முகங்களுடன், 33 அடி உயரத்தில் வடிக்க உள்ளோம். ஓராண்டில் பணிகள் முடியும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar