பாலமேடு: பாலமேடு அருகே செம்பட்டி வரம்தரும் ஆதிஜோதி முருகர் கோயிலில் புரட்டாசி மாத கார்த்திகை வழிபாடு நடந்தது. நேற்று காலை சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை குருமகான் ராமானுஜ பாலாஜி செய்தார். ராஜ அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு வர சித்தி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.