கீழக்கரை, கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயிலில் உள்ள மகா கணபதிக்கு சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாலை 5 மணி அளவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பஜனை, நாமாவளி உள்ளிட்டவைகள் நடந்தது.
*கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி செல்லும் வழியில் உள்ள கனவில் வந்த கணேசர் கோயிலில் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு மூலவர் கணேசருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.