மயிலம் : மயிலம் கோவிலில் இலவச பேட்டரி கார் சேவை துவக்க நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி, தெய்வானை சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வரும் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் கோவில் படி ஏற முடியாமல் அவதியடைகின்றனர். அவர்களது வசதிக்காக இலவச பேட்டரி கார் சேவை நேற்று துவங்கப்பட்டது. நேற்று நடந்த நிகழ்ச்சியில், பொம்மபுர ஆதீனம் 20ம் பட்ட சிவஞானம் பாலய சுவாமி, பேட்டரி கார் சேவையை துவக்கி வைத்தார். ஆதீன திருமடத்தைச் சேர்ந்த சிவக்குமார், விஸ்வநாதன், ராஜ்குமார் ராஜேந்திரன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.