காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2022 10:10
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் நேற்று கோயில் நிர்வாக அதிகாரி ராணா பிரதாப் தலைமையில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மூலம் உண்டியலில் செலுத்திய பணம் மற்றும் தங்கம் ஆகியவற்றை கணக்கிடும் பணியில் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஈடுபட்டனர் . கடந்த 26 நாட்களில் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தியது பணமாக ஒரு கோடியே 53 லட்சத்து 81 ஆயிரத்து 575 ரூபாய், தங்கம் 98 கிராம், வெள்ளி 2 கிலோ 550 கிராம், வெளிநாட்டு பணம் 900 டாலர்கள் இருந்ததாக கோயில் அதிகாரி ராணா பிரதாப் தெரிவித்தார்.