பதிவு செய்த நாள்
18
அக்
2022
10:10
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வரும், 25ம் தேதி, சூரிய கிரகணத்தையொட்டி, கோவில் நடை அடைக்கப்படும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் சூரிய கிரகணத்தன்று, கோவில்கள் நடை அடைக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு, சூரிய கிரகணம் வரும், அக்., 25ம் தேதி நிகழ்கிறது. இந்நிலையில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வரும், 25ம் தேதி சூரிய கிரகணத்தையொட்டி, அன்று மாலை, 3:00 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். இதனால், வரும், 25ம் தேதி மாலை, 3:00 மணிக்கு மேல், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். மறுநாள் அக்., 26ம் தேதி காலை 6:00 மணிக்கு வழக்கம் போல பூஜை வழிபாடுகள் நடைபெறும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.