ராயிரநல்லூர் மலையேற்றம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2022 08:10
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாணி கொப்பம் அருகே உள்ளது ராயிரநல்லூர் மலை. இம்மலை மேல் உள்ளது பந்திருகலத்தின் புனித மனிதனான "நாறாணத்து பிராந்தன் " என்ற மனநிலை பாதித்தவரின் பிரமாண்ட உருவச் சிலையும் உள்ளனர். சிலையொட்டி பகவதி அம்மனின் கோவிலும் உள்ளது. எல்லா ஆண்டும் ஐப்பசி மாதம் ஒன்றாம் தேதி "மலை ஏற்றம்" நிகழ்ச்சி மிகவும் பிரபலம். நடப்பாண்டு நிகழ்சசி நேற்று நடைபெற்றது.
500 மீட்டர் உயரமுள்ள மலை ஏற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து எட்டியோ பக்தர்கள் அதிகாலை 4 மணி முதல் மலையேற துவங்கினர். மலை மீது அலைமோதும் பக்தர் வெள்ளம் காண முடிந்தனர். கல்லும் முள்ளும் மிதித்துள்ள இந்த சாகசமாக மலையேற்றம் நினைத்த காரியம் நிறைவேறுவதற்கான பயணம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனாலேயே முதியவர்களும் குழந்தைகளும் மலை ஏற எட்டியிருந்தனர். பகவதி அம்மன் தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்கள் "நாறாணத்து பிராந்தனின் " உருவச் சிலையை வலம் வந்து மலை இறங்கினர். கொரோனா அச்சுறுத்தல் கட்டுப்பாடுகள் நீங்கியதால் இம்முறை ஏராளமான பக்தர்கள் வந்தனர். பக்தர்களை கூட்டம் கட்டுப்படுத்த 200 போலீசாரை பணியமர்த்தியிருந்தனர்.