கீழக்கரை: கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள பத்திரகாளி அம்மன், ஸ்ரீமன் நாராயணசாமி கோயிலில் மகாலட்சுமி மற்றும் குபேரர் சன்னதி உள்ளது.
ஐப்பசி வியாழக்கிழமை முன்னிட்டு குபேரர், மகாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு கையில் பச்சை கயிறு கட்டியும், பச்சை குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏராளமான பெண்கள் நெய் விளக்கேற்றி குபேர வழிபாடு செய்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் குபேரனுக்கு தனி சன்னதி இப்பகுதியில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.