பதிவு செய்த நாள்
21
அக்
2022
07:10
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் நடந்தது. தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி- உலகம்பாள் கோயில் ஐப்பசி திருக்கல்யாண விழா, கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும், மண்டகப்படி சார்பில் தீபாராதனை, சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 9 மணிக்கு நடந்தது. பக்தர்கள் சிவ கோஷம் முழங்க நடந்த தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில், சி டி.எஸ்.பி., மணிமாறன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், குவரத்து காவலர் பிரபு, நகராட்சி துணை தலைவர் சுப்பையா, பா.ஜ., மாவட்ட துணை தலைவர் முத்துக்குமார், கவுன்சிலர்கள் சங்கர சுப்பிரமணியன், லட்சுமண பெருமாள், ராஜாமணி டெக்ஸ்டைல் ராஜாமணி, சண்முகசுந்தரம், கூட்டுறவு சொசைட்டி தலைவர் உச்சிமாகாளி (எ) துப்பாக்கி பாண்டியன், அன்னையா பாண்டியன், சுப்பாராஜ், இந்து முன்னணி இசக்கிமுத்து, நாராயணன் மற்றும் சிவனடியார்கள், பக்தர்கள் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். நாளை (22ம் தேதி) காலை 8.20 மணிக்கு மேல் யானை பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் தபசுக்கு எழுந்தருளல் நடக்கிறது. தொடர்ந்து மாலை 6.05 மணிக்கு மேல் தெற்கு மாசி வீதியில் காசிவிஸ்வநாத சுவாமி, உலகம்மாளுக்கு பசு காட்சி கொடுத்தல் வைபவம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.