வீரவநல்லுார் பூமிநாத சுவாமி கோயிலில் ஐப்பசி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2022 07:10
திருநெல்வேலி: வீரவநல்லுார் மரகதாம்பாள் சமேத பூமிநாதசுவாமி கோயில் ஐப்பசி திருக்கல்யாண விழாவை முன்னிட்டு நேற்று காலை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. நெல்லை மாவட்டம், வீரவநல்லுார் மரகதாம்பாள் சமேத பூமிநாதசுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த12ம் தேதி காலை காப்பு கட்டுதலுடன்து வங்கியது. விழா நாட்களில் தினமும் இரவு 7.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவின் 9ம் நாளான நேற்று காலை10 மணிக்கு அம்பாள் தேரோட்டமும், இரவு அம்பாள் புறப்பாடும் நடந்தது. இன்று (21ம் தேதி) காலை தீர்த்தவாரி, நாளை (22ம் தேதி) காலை 9 மணிக்கு காந்திசிலை அருகில் அம்பாள் தபசுக் காட்சி, இரவு திருக்கல்யாணம், காட்சி அளிக்கும் வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.