சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த சி.தண்தேஸ்வர நல்லூர் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் தீபாராதனை நடந்தது.
சிதம்பரம் அடுத்த சி.தண்டேஸ்வர நல்லூரில் அமைந்துள்ளது ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில். 10ம் ஆண்டு கும்பாபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாரதனையும் சிறப்பாக நடந்தது. காலை 8.30 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10.30 மகாபூர்ணாஹூதி, தீபாரதனையும், 11 மணிக்கு ஸ்ரீ விநாயக பெருமானுக்கு சிறப்பு மகா அபிஷேகம் மற்றும் அலங்காரமும், 11:30 மணிக்கு மேல் மகா தீபாரதனை மற்றும் அன்னதானம் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் நல்லாசிரியர் ஜெயபால் தலைமையில் நடந்த விழாவில் உறுப்பினர்கள் கருணாநிதி, பட்டுசாமி மற்றும் அப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர். தண்டபாணி ஐயர் குழுவினர் செய்திருந்தனர்.