நத்தம் மாரியம்மன் கோவிலில் 48வது நாள் மண்டல பூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23அக் 2022 07:10
குள்ளனம்பட்டி: சாணார்பட்டி அருகே ஆவிளிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாயூர் கிராமத்தில் பால் பண்ணை அமைக்க இடம் தேர்வு செய்து குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.சாணார்பட்டி அருகே ஆவளிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கால்நடை வளர்ப்பதை விவசாயிகள் பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். கால்நடையில் இருந்து பெறப்படும் பாலை தினமும் சுமார் 5 கிலோ மீட்டர் கடந்து சாணார்பட்டியில் உள்ள பால்பண்ணைக்கு கொண்டு சென்றனர்.இதனால் அவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.இந்த நிலையில் ஆவிளிப்பட்டி ஊராட்சியில் பால் பண்ணை அமைக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.அதன் பேரில் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் துணை பதிவாளர் பரிந்துரையின் பேரில்,திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் சந்தனமேரி கீதா,ஆவிளிபட்டியில் உள்ள பெருமாயூர் கிராமத்தில் பால் பண்ணை அமைப்பதற்கான நிலத்தை ஆய்வு செய்தார்.இதில் மண்டல துணை வட்டாட்சியர் தங்கமணி,வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் கல்யாணசுந்தரம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.