மதுரை: ஐப்பசி அமாவாசையான நாளை (அக்.25) சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவில் தெரியும்இந்த கிரகணம் நாளை மாலை 5:13க்கு துவங்கி 6:09 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் கர்ப்பிணிகள் சூரியனைப் பார்க்க கூடாது. மதியம் 12:00 மணிக்கு முன்பாக உண்பது நல்லது. செவ்வாய் கிழமை பிறந்தவர்கள், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஜாதகத்தில் சூரிய திசை, சூரிய புத்தி உள்ளவர்கள் கிரகணம் முடிந்த பின் கடலில் அல்லது வீட்டில் கல் உப்பு சேர்த்த நீரில் குளிக்க வேண்டும். பரிகார ராசியினர் கட்டாயம் (அக்.26 புதன் கிழமை) காலையில் கோயிலுக்கு செல்ல வேண்டும்.