திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2022 09:10
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசன தீபாராதனை, 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. இன்று காலை 5:30 மணிக்கு ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்பட்டார். காலை 7:30 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. சூரிய கிரகணம் நடப்பதால் இன்று மாலை 4:00 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது. பின்னர் 6:45 மணிக்கு நடை திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகள் தொடர்கின்றன. விழா நாட்களில் தினமும் தீபாராதனை, அபிஷேகம் நடக்கிறது. 6ம் திருநாளான வரும் 30ம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை 4:00 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்வுக்குப் பிறகு சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் மகா தீபாராதனை நடக்கிறது. அக்.31ல் 7ம் திருநாளன்று இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. தொடர்ந்து நவ.5ம் தேதி வரை கந்த சஷ்டி விழா நடக்கிறது.