உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில் அமாவாசையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது.
உளுந்தப் படை தாலுகா பாதூர் ஸ்ரீ பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில் அமாவாசையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. அதனையொட்டி நேற்று காலை 10.30 மணியளவில் யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் நெய், பால், பழங்கள், பிரசாதம் சாற்றப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றக்கோரி எழுதிய வெற்றிலை மற்றும் புடவைகளை யாக குண்டத்தில் சாற்றப்பட்டன. பின்னர் தீபாரதனை வழிபாடு நடந்தது. இதில் உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திருவெண்ணைநல்லூர், திருக்கோவிலூர், பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.