பண்ணாரி அம்மன் கோயிலில் சூரிய கிரகணம் முடிந்து பூஜை நடைபெற்றது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2022 10:10
ஈரோடு : சூரிய கிரகணத்தையொட்டி பண்ணாரியில் காலையில் தரிசனத்திற்கு அனுமதி மதியம் நடை அடைக்கப்பட்டது.
நேற்று சூரியகிரகணத்தையொட்டி பண்ணாரி அம்மன் கோவில் நடை மதியம் 2மணிக்கு அடைக்கப்பட்டது. அமாவாசை என்பதால் காலைமுதலே கூட்டம் அலைமோதியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற கோவில் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு தமிழக,கர்நாடக,பக்தர்கள் அதிகளவில் வந்து தரிசனம் செய்வது வழக்கம். அமாவாசை, பௌர்ணமி மற்றும் விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இன்று அமாவாசை என்பதால் காலை முதலே பக்தர்கள் கூட்டம்கூட்டமாக புளியம்பட்டி, பவானிசாகர், சத்தியமங்கலம், அவிநாசி, அந்தியூர், திருப்பூர், உள்ளிட்ட ஊர்களிலிருந்து 8000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று சூரிய கிரகணம் மாலை 5.14க்கு ஆரம்பித்து 6.10க்கு முடிவடைவதால் கோவில் நடை மதியம் 2மணிக்கு அடைக்கப்பட்டது. சூரிய கிரகணம் முடிந்த பின்பு கோவில் சுத்தப்படுத்தப்பட்டு இரவு 7.30மணிக்கு சாயரட்சை பூஜை, 8.30க்கு அர்த்த ஜாம பூஜையும் நடைபெற்றது.