பதிவு செய்த நாள்
26
அக்
2022
10:10
கோபால்பட்டி, சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை மகா கணபதி பூஜை நடந்தது. கொடிக்கம்பம் மற்றும் உற்சவர் சிலைக்கு பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், குங்குமம், விபூதி, திருமஞ்சனம் உட்பட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது.
தொடர்ந்து கந்த சஷ்டி மகோத்ஸவ திருக்கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து செந்தமிழ் வேள்வி மற்றும் நூறாயிரம் லட்சார்ச்சனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி சுவாமி திருவுலா சென்றார். சிறப்பு அன்னதானம் நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் துவங்கினர். அக்டோபர் 26-ல் முருகப்பெருமாள் சிவபூஜை திருக்காட்சியும், 27-ந்தேதி முருகப்பெருமான் சிவ உபதேச திருக்காட்சி, 28-ந்தேதி அருணகிரியாருக்கு நடனக்காட்சி அருளல், 29-ந்தேதி வேல் வாங்கும் திருக்காட்சி, கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 30-ந்தேதி கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நடைபெறும். 31-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதில் கம்பிளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் விஜயா வீராசாமி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் அழகுலிங்கம்,செயல் அலுவலர் சுகன்யா மற்றும் கந்த சஷ்டி விழா குழுவினறும் யாக வேல்வி பூஜைகளை சாதாசிவ சிவாச்சாரியார் குழுவினர்கள் செய்திருந்தனர்.