பதிவு செய்த நாள்
26
அக்
2022
06:10
சூலூர்: சூலூர் வட்டார முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா துவங்கியது.
சூலூர் வட்டார முருகன் கோவில்களில் கோவில்களில் நேற்று காலை, கணபதி ஹோமத்துடன் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா துவங்கியது. கருமத்தம்பட்டி அடுத்த விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில் அதிகாலை, 4:30 மணிக்கு கணபதி ஹோமம் துவங்கியது. தொடர்ந்து, அபிஷேகம், பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், சத்ரு சம்ஹார ஹோமம், மகா தீபாராதனை நடந்தது. சின்னியம்பாளையம் வேல் முருகன் கோவிலில், நேற்று காலை, 7:30 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் காப்பு கட்டுதல், அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன.
பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவிலில் நேற்று பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். இதேபோல், காங்கயம் பாளையம் சென்னியாண்டவர் கோவில், கண்ணம்பாளையம் பழனி ஆண்டவர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி கொண்டு, கந்த சஷ்டி விரதத்தை துவக்கினர்.அபிஷேக, அலங்கார பூஜைக்குப் பின் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.