பதிவு செய்த நாள்
27
அக்
2022
09:10
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலச்செங்குடி நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன், கருப்பண சுவாமி கோவில், 48 ஆம் நாள் மண்டல பூஜை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, கணபதி ஹோமம், சங்காபிஷேகம், யாக சாலை பூஜைகள் நடைபெற்று, யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர், மூலவர்களுக்கு ஊற்றப்பட்டு மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து மூலவர்களுக்கு சந்தனம், குங்குமம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற தீப ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில், நிர்வாக குழு தலைவர் போஸ், செயலாளர் கார்த்திகை ராஜா, பொருளாளர்கள் முத்துக்குமார், கலைச்செல்வன், சட்ட ஆலோசகர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில், மேலச்செங்குடி, வாணியக்குடி, கடலூர், வெட்டுக்குளம் பகுதிகளைச் சார்ந்த குலதெய்வ குடிமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.